அக்டோபர் 02, 2020
இன்று நமது தேசத்தந்தை காந்தியடிகளின் 151-ஆவது பிறந்த நாள் விழா.
அதனைக் கொண்டாடும் விதமாக, என் மனதில் காந்திஜி*எனும் தலைப்பில் ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், வண்ணக் கோலமிடுதல், பேச்சு, கவிதை கூறுதல், காந்தியடிகள் போல ஆடையணிதல், காந்தியடிகளின் பொன்மொழிகள் கூறுதல் என மகாத்மா காந்தியடிகள் அவர்களை நினைவுகூறும் வகையில் குழந்தைகள் ஏதேனும் செயல்பாடுகளைச் செய்து அதைப் புகைப்படங்கள் எடுத்து, தங்கள் வகுப்பு வாட்ஸ்ஆப் குழுவில் பகிர்ந்து இந்நாளைச் சிறப்பிக்குமாறு அன்போடு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது...
இந்நிகழ்வில் பங்குபெறும் அனைத்துக் குழந்தைகளுக்கும், அவர்தம் ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இங்ஙனம்,
தலைமையாசிரியர்,
மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி,
மணிநகரம், மதுரை-625001.