கலைத் திருவிழா 2024
மணல் சிற்பம்
வறுமையின் செழிப்பும் வறட்சியின் கேடும் (பூமி)
கலைத் திருவிழா 2024
மணல் சிற்பம்
வறுமையின் செழிப்பும் வறட்சியின் கேடும் (பூமி)
இன்று எங்கள் மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியை மதுரை மாவட்டக் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் பார்வையிட்டார். பள்ளியின் செயல்பாடுகளைப் பாராட்டி, தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் நமது மங்கையர்கரசி நடுநிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு C பிரிவு மாணவன் ரா. ஜீவானந்தம் இரண்டாமிடம் பெற்று ரொக்கப் பரிசாக ரூபாய் 3000 பரிசுத்தொகை பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பரிசு வென்ற இம்மாணவருக்கு நமது பள்ளியின் சார்பிலே பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்...
பாரதியார் தினவிழா குடியரசு தினவிழா மதுரை ஆரப்பாளையம் குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளில்-தடகள போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில்-
600m ஓட்டப்பந்தயம் - முதல் பரிசு
400m ஓட்டப்பந்தயம் - முதல் பரிசு
200m ஓட்டப்பந்தயம் - இரண்டாம் பரிசு பெற்று
பா. ஶ்ரீ சுதன் என்ற 8-A1 மாணவர் OVERALL CHAMPIONSHIP - பட்டம் பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இம் மாணவருக்கு நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியின் சார்பிலே பாராட்டுகள் வாழ்த்துகள்...
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
மதுரை, புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 31-07-2024 புதன்கிழமை அன்று நடைபெற்ற Block Level Chess Competition-2024 போட்டியில் P.பிரவீன் என்ற 5-A1 மாணவர் மூன்றாம் பரிசும், S.சோகிதா என்ற 5-A1 மாணவி இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இம் மாணவர்களுக்கு நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியின் சார்பிலே பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்...
மதுரை, அழகப்பன்நகர், YMCA ஸ்கேட்டிங் மைதானத்தில் SUN RISE MOUNTAIN Roller Skating Academy சார்பில் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற 12-ஆவது Championship-2024 ஸ்கேட்டிங் போட்டியில் R.தண்டீஸ்வரன் என்ற 7-A1 மாணவர் Event-1-ல் மற்றும் Event-2-ல் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இம் மாணவருக்கு நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியின் சார்பிலே பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்...
மதுரை, அழகப்பன்நகர், YMCA ஸ்கேட்டிங் மைதானத்தில் SUN RISE MOUNTAIN Roller Skating Academy சார்பில் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற 12-ஆவது Championship-2024 ஸ்கேட்டிங் போட்டியில் P.முகுந்தன் என்ற 6-A1 மாணவர் Event-1-ல் இரண்டாம் பரிசும், Event-2-ல் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இம் மாணவருக்கு நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியின் சார்பிலே பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்...